காஞ்சி மடத்தின் உண்மையான சரித்திரம்
வித்யாசங்கர் சுந்தரேசன்
ஆகஸ்ட் 3, 1994
இந்த கட்டுரை
கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் திரு.வித்யாசங்கர்
எழுதி இருந்த கருத்துக்களை மொழி பெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.
This article is a translation
of Sree Vidyasankar Sunderesan’s comments based on the references given in the
end of the article.
அத்வைத ஞானியான ஆதிசங்கரர் பாரதத்தில்
சிருங்கேரி, பூரி, த்வாரகா, பத்ரிநாத் ஆகிய நான்கு பீடங்களை ஏற்படுத்தி வைத்தார்.
சர்வக்ஞபீடத்தை காஷ்மீரில் ஏற்படுத்தி கேதார்நாத்தில் முக்தியடைந்தார். இதில் எந்த
மடமும் பிற மூன்று மடங்களை, அதன் அதிகாரங்களை கோரவில்லை. ஆனால், காஞ்சி மடமோ
ஐந்தாவதாக சர்வக்ஞ பீடத்தை காஷ்மீரில் நிறுவவில்லை காஞ்சியிலேயே நிறுவி,
காஞ்சியிலேயே முக்தி அடைந்தார் என்று கூறுகிறது. இந்த வாதத்தையே காஞ்சி மடத்தை
பின்பற்றுபவர்கள், அதன் நூற்றாண்டு கண்ட மடாதிபதியான சந்திரசேகர சுவாமிகள் மற்றும்
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடுக்கும் ஊக்கத்தில் பரப்பி வருகிறார்கள்.
நதிமூலம்,
ரிஷிமூலம் ஆராயக்கூடாது என்ற பழமொழி ஒன்றுண்டு. ஆனாலும், இந்திய வரலாற்றில் இதனை
ஆராய வேண்டியுள்ளது. சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் நல்ல அதிகாரம் மிக்கவராக
விளங்கினார். அவரது சீடர்கள் சிலர் அவரை நடமாடும் தெய்வம் என்று போற்றினர். அவரது
சீடர்கள் அவரை ரிஷி, தெய்வம் என்று போற்றி வழிபட்டாலும், காஞ்சி மடத்தின் தோற்றம்
பற்றிய வெளிப்படையான பேச்சுகள் எதுவும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில்
நடைபெறவில்லை. அவரே அந்த மடத்தின் மாற்றப்பட்ட சரித்திரத்தை சிரத்தையுடன் பரப்பி
வந்தார். மடத்தின் பெருமையையோ, மடாதிபதியின் பண்புகளையோ குறை சொல்லும் நோக்கில்
நான் இதனை ஆராயவில்லை என்றாலும், சரித்திரத்தில் இருக்கும் உண்மையை உணமையாக கூற
வேண்டிய கட்டாயம் உள்ளது.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்திலிருந்து காணாமல்
போனார். நான்கு மாநிலங்களில் அவரை தேடி உளவுத்துறையும் போலீசாரும் அலைந்தனர்.
காஞ்சி மடத்தின் பக்தர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தார்கள். சாதுர்மாஸ்ய விரத
காலத்தில் ஒரு சந்நியாசி தன இருப்பிடத்தி விட்டு வேறெங்கும் போகக்கூடாத
சூழ்நிலையில் அவர் காணாமல் போனார். இறுதியில் கர்நாடகத்தில் தலைக்காவேரியில்
கண்டுபிடிக்கப்பட்டார். இதனை, இந்தியா ஊடகங்கள் மிகப்பெரிய செய்தியாக வளைத்து
வளைத்து எழுதித்தள்ளியது. காஞ்சி மடம் இத்திய முழுவதும் நல்ல ஊடக விளம்பரத்தை
பெற்றது. Sept. 13, 1987 issue of The Illustrated Weekly of India வில் திரு.கே.பி.சுனில் அவர்கள் கட்டமிடப்பட்ட ஒரு செய்தியை “வழக்கிடப்படும்
பாரம்பரியம்” ("Disputed Lineage”) என்ற தலைப்பில் எழுதி
இருந்தார்.
ஆகஸ்ட் 25 தேதி ஜெயந்திர
சரஸ்வதி சுவாமிகள் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாக த்வாரகா
சங்கராச்சார்யார் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாசிய விரத காலத்தில்
பூனாவில் தங்கி இருக்கும் போது, காஞ்சி மடத்தை பற்றிய ஆழமான விசாரணை தேவை என்று
வழியுருத்தியதுடன் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சங்கராச்சாரியார் என்று கருத
முடியாது, ஏனென்றால் காஞ்சி மடம் ஆதி சங்ராச்சாரியாரால் ஸ்தாபிக்கப்பட்ட மடம்
கிடையாது. அது சிருங்கேரி மடத்தின் கிளை மடமே என்று கூறி இருந்தார்.
சர்.சி.பி.ராமசாமி அய்யர் இந்துமத அறநிலைய
துறையின் மத்திய ஆணையத்தின் தலைவராக இருக்கும் போது, “காஞ்சி காமகோடி பீடம்” என்ற
ஒன்றே இல்லை என்று அறிவித்தார்.எனினும்,
காஞ்சி மடம் நாட்டின் மிகப்பெரும் மத அமைப்பாக வளர்ந்தது. இதற்கு முழுமூச்சாக
இருந்தவர் காஞ்சி பெரியவர், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதிசுவாமிகள் ஆவார். அவரே கும்பகோணத்தில்
அழியும் நிலையில் இருந்த மடத்தை காஞ்சிபுரத்தில் புதுப்பித்து நிறுவினார். சரித்திரத்தில்
அறிந்தது என்னவெனில் ஆதிசங்கரர் 32 வயதாக இருக்கும் போது பாரதம் முழுவதும் சென்று
நான்கு மடங்களை நிறுவினார் என்பது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் செய்திகளாக
காஞ்சி மடத்தினர் கூறுவது காஞ்சிமடத்தை ஐந்தாவதாக நிறுவி பிற மடங்களை நிர்வகிக்க
முற்பட்டார் என்கின்றனர். ஆதிசங்கரரின் பிரதான சிஷ்யராகிய சுரேஷ்வராச்சாரியர்
காஞ்சி மடத்திற்கு பொறுப்பாக ஆதிசங்கரால் நியமிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.ஆனால், சிருங்கேரி மடமும் அம்மடத்தின் முதல்
மடாதிபதியாக சுரேஸ்வராசார்யர் இருந்தார் என்கிறது. சுரேஸ்வராசார்யரை காஞ்சி
மடத்தின் பொறுப்பாக இருந்தார் என்று கூறுவது இவர்களது கட்டுக்கதை ஆகும்.
காஞ்சிமடத்தையே சங்கராசார்யர் நிறுவவில்லை எனும்போது எங்கிருந்து வந்தது
சுரேஷ்வராச்சாரியர் நியமனம். காஞ்சி மடம்தான் சுரேஷ்வராச்சாரியரை கோருகிறதே தவிர
சிருங்கேரி மடம் எங்களுடையதே என்று முதலில் கூறவில்லை. சொல்லப்போனால், சிருங்கேரி
மடத்தில் மிகபழைய அங்கீகரிக்கப்பட்ட சுரேஷ்வராச்சாரியரின் சமாதி இன்னும் சாரதா
தேவி கோயிலில் உள்ளது.
சுனில் கட்டுரையில் கூறியதாவது, சரித்திர
ஆய்வாளர்கள் காஞ்சி மதமானது 1821 ஆம் ஆண்டு சிருங்கேரி மடத்தின் கிளைமடமாக தஞ்சாவூரின் சரபோஜியால்
நிறுவப்பட்டது என்கிறார். பின்பு மைசூருக்கும், தஞ்சாவூருக்கும் சண்டை மூண்டதால்
கும்பகோணம் மடம் சிருங்கேரி மடத்திலிருந்து விடுதலை பெற்று தனியாக பீடத்தை நிருவியதாக கூறுகின்றனர்.
ஆனால், சரபோஜி 1821 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ராஜாவாக இருக்கவில்லை. அப்போது இருந்தது பிரதாப் சிங்
துளஜாஜி. கும்பகோணம் மடத்தின் கட்டிடத்தில் 1821 என்ற தேதி சரியாக
உள்ளது. மேலும், மராத்தி ராஜாவுக்கும், மைசூர் உடையாருக்கும் போர் மூண்டதாக எந்த
தடயமும் ஆவணங்களும் 1821 இல் கிட்டவில்லை. அந்த சமயம்
இருவருமே பிரிட்ஷின் எடுபிடிகளாக மாறி இருந்தனர் என்பதே உண்மை. எனவே
இதெல்லாம் ஒரு கற்பனையே என்பதை சொல்லிபுரியவேண்டியதில்லை.
கட்டுரையில் காஞ்சிமடத்திற்கு
எதிராக சுனில் கூறும் முக்கியமான உண்மைகள் என்னவெனில்,
1.
சிருங்கேரி மடத்தின் கிளை மடம் ஒன்றை 1821 ஆம் ஆண்டு
கும்பகோணத்தில் தஞ்சாவூர் ராஜாவின் உதவியால் நிறுவினர். அம்மடத்தின் முத்திரை
கன்னட மொழியிலிருந்தது. மேலும், சாரதா மடம் என்றே குறிப்பிடப்பட்டது.
சிருங்கேரியில் சாரதாதேவி வழிபடப்பட்டதால், அங்கிருந்து வந்ததாலேயே சாரதா மடம்
எனப்பட்டது. காநிபுரத்தில் இருந்து வந்திருந்தாள் காமாட்சியை அல்லவே வைத்திருக்க
வேண்டும். எனவே கும்பகோணம் மடம், இன்றுள்ளவர்கள் கூறுவது போல் காஞ்சிபுரத்தில்
இருந்து வரவில்லை, சிருங்கேரியிலிருந்தே வந்தது என்பது உறுதி.
2.
கும்பகோணம் மடம் சிருங்கேரியிலிருந்து விடுதலை
பெற்றது என்று கூறுகிறது. மேலும், ஒருபடி சென்று சிருங்கேரி மடத்தின் கிளை மடம்
என்பதை மறைத்து இம்மடம் சங்கராச்சார்யராலேயே காஞ்சிபுரத்தில் பிற மடங்களை
நிர்வகிக்க நிறுவப்பட்டது என்று கூசாமல் பொய் உரைத்தது. மேலும், ஆதி சங்கரர் சமாதி
அடைந்தார் இதுவே சர்வக்ஞ பீடம் என்று கூறுவதையே பாரம்பரியமாக கொள்ள ஆரம்பித்தது. பிரச்சனை
என்னவென்றால் ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தை மிகவும் பின் கொண்டு சென்று 477 B.C. என்று நிர்ணயித்து அதிலிருந்து குருபரம்பரையின்
பெயர்களை பொத்தாம் பொதுவாக பட்டியலிட்டது.
3.
கும்பகோணம் மடம் மீண்டும் காஞ்சிபுரத்திற்கு
மாற்றப்பட்டதாக அதன் புதுசரித்திரம் கூறுகிறது. 1839 ஆம் ஆண்டு
கும்பகோனமடாதிபதி காமாக்ஷி கோயிலில் கும்பாபிசேகம் செய்ய இங்கிலீஷ் கலெலக்டரிடம்
அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். 1842 ஆம் ஆண்டு
பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கும்பினி கவர்மன்டால் காஞ்சிபுரம் காமாக்ஷி கோயிலுக்கு
தனி டிரஸ்டியாக நியமிக்கப்பட்டார். இது மிகவும் அழகாக ஆவணமாகியுள்ளது. காமாக்ஷி
கோயிலின் உண்மையான குருக்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்து நிறைய
புகார் மனுக்களை அளித்துள்ளனர். ஆக, காஞ்சி மடம் என்பது 1842 முதல் இருக்கும்
ஒரு மடமாகிறது. தலைமை மடம் கும்பகோணத்திலேயே இருந்திருக்கிறது. அதன் சந்நியாசி
மட்டும் அவ்வப்போது காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று வெள்ளைக்காரனால்
கொடுக்கப்பட்ட உரிமைகளை செய்து வந்துள்ளார். மடம் உண்மையில் தஞ்சாவூர் மற்றும்
காஞ்சிபுரம் பகுதியில் சிலருக்கு மட்டும் வழிகாட்டியாக இருந்து வந்தது. சீக்கிரமாக
தனது இருப்பை நிரந்தரமாக்க பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது.
4. திரு.சுனில்
அவர்கள் கூறியது போல் இந்த பிரச்சாரம் இருவதாம் நூற்றாண்டில் சிதைந்து போயிருந்த
கும்பகோண மடத்திற்கு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றதும் இந்த போலி
சரித்திரத்தை பிரச்சாரமாக கொண்டு சென்றார். காஞ்சி மடத்தின் சரித்திரத்தை மாற்றி
எழுதினார். அதில் ஒன்றே 477 BC இலிருந்து குரு பரம்பரையை பட்டியலிட்டது.
முனனர் இருந்த குருபரம்பரை பற்றிய தகவல்கள் முன்னுக்கு பின் முரணாகவே
இருக்கிறது. 1820 ஆம் ஆண்டுக்கு பிறகு இருக்கும் பெயர்கள் மட்டுமே சரியாக இருக்கிறது. 69 ஆவது மடாதிபதியாக
கூறப்படும் ஜெயேந்திர சரஸ்வதியே கும்பகோணம் மடம் எனப்படும் காஞ்சி மடத்தின் 6 அல்லது 7 வது மடாதிபதி
ஆவார். ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியும் சரி, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியும் சரி மிகவும்
அதிஷ்டசாலிகள்.. தத்துவ ஞானி டாக்டர். T. M. P. மகாதேவன், பாரதி வித்யா
பவன் நிர்வாக இயக்குனர் S. ராமகிருஷ்ணன், அருண் ஷோரி, ராம்நாத் கோயங்கா, ஜனாதிபதி வெங்கட்ராமன் போன்ற பெரியமனிதர்களை அவர்களால் கவர முடிந்தது. பெர்லின்
சுவர் வீழ்ந்த பொது பாரதி வித்யா பவனின் பத்திரிகையில் ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
பெர்லின் கல்லுடன் நிற்பது போன்ற புகைப்படம் பதிக்கப்பட்டது. ஸ்ரீ சின்மோய்
அவர்களால் கொடுக்கப்பட்ட அந்த கல்லை காஞ்சிபுரம் மடத்தின் விளம்பரத்திற்காக
திரு.ராமகிருஷ்ணன் பயன்படுத்திக்கொண்டார். காஞ்சி மடத்தின் விளம்பர ஏஜண்டாகவே
செயல்பட்டார்.
இது போல் பல பொய்களை காஞ்சி மடத்திற்கு
சம்பந்தப்பட்டதை கூற முடியும். காஞ்சி மடம் இது போன்ற பொய்களை பரப்புவதன் மூலம்,
அதன் ஆச்சார்யர்களின் பெருமையை புனிதத்தன்மையை இழந்து வருகிறது.
மேலும், பதினைந்தாம் நூற்றாண்டில் கும்பகோண
மடத்தின் 53 வது மடாதிபதியாகிய இருந்ததாக கூறப்படும் மகா தேவேந்திர சரஸ்வதி எழுதிய
வியாசசாலிய சங்கர விஜயத்தில், எங்கும் காஞ்சி மடத்தை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால்,
அதனது தமிழ் மொழிபெயர்ப்பில் ஆச்சார்ய கிருஷ்ண சாஸ்திரி நேபால் ராஜா
கும்பகோணத்திலிருந்த காஞ்சி மடத்தை தனது ராஜகுருவாக ஏற்றுக்கொண்டு வருடாவருடம்
குருதக்ஷினை அளித்து வந்ததாக கூறியுள்ளார். இந்த கூற்றை சந்தேகித்த
ஆராய்ச்சியாளர்கள் நேபால் ராஜ குடும்பத்திடம் இது பற்றி வினவினர். அதுபற்றி மே13. 1940 தாங்கள் எப்போதும்
இல் நேபால் ராஜ அளித்த பதிலில் காஞ்சி காமகோடி பீடத்தை குருவாக கொண்டது கிடையாது
அவர்களுக்கு திரு ஆச்சார்ய கிருஷ்ண சாஸ்திரி கூறுவது போல் எந்த குருதக்ஷனையும்
கொடுத்தது கிடையாது என்று பதிலளித்திருக்கிறார். 1821 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட மடத்தை, பதினைந்தாம் நூற்றாண்டிலேயே இருந்ததாக கூறுவது முற்றிலும்
முரண்பட்டது. அதோடு நில்லாமல், நேபால் ராஜாவுக்கு குருவாக இருந்ததாக கூறும் பொய்
வேறு. திரு ஆச்சார்ய கிருஷ்ண சாஸ்திரி கூசாமல் பொய்க்கதையை காஞ்சி மடத்தை தூக்கி
பிடிக்க எழுதியிருக்கிறார். இதை யார் கண்டுபிடிக்கப்போகிறார்கள் என்று எண்ணம்தான்
இதற்கு காரணம்.
காஞ்சி மடத்தின் கூற்றுகள் நமது நாட்டு
சரித்திரத்தில் மிகப்பெரிய பித்தலாட்டமாகும். ரோமன் கத்தோலிக்க சர்ச் போல தலைமை
கொண்ட ஊர் அமைப்பு இந்தியாவில் எல்லா சங்கர மடங்களையும் நிர்வகிக்கும் ஒரு
பொறுப்புடன் ஒரு நிறுவனம் இந்திய சரித்திரத்தில் இல்லை. இது போன்ற ஒரு மைய அமைப்பு
என்பது பாரதத்திற்கு அந்நியமானது. அப்படியே இருந்தாலும் நான்கு திசைகளில் இருந்த
மடங்களை நிர்வகிக்க மதியமாக பிரயாகை, உஜ்ஜைனி, காசி போன்ற இடங்களில் மடத்தை
நிறுவாமல் கடைகோடியில் இருக்கும் காஞ்சியில் அதை நிறுவினர் என்பது புவியியல்
ரீதியாக உண்மையானதாக இல்லை. அதனால், காஞ்சி மடம் என்பதே ஒரு கற்பனையான உருவாக்கம். அது மிக அண்மையான ஒன்றே. காவி அணிந்த
ஒவ்வொருவரும் சிலரால் கவரப்படுவர். அதுபோலவே சந்திரசேகர சுவாமிகளின் தேஜஸில் பலர்
கவரப்பட்டுள்ளனர் மற்றும் முக்கியமான கோயிலான காஞ்சி காமாக்ஷி அம்மன் இவர்களது
பொய்களுக்கு வித்தாக அமைந்தது.
இந்தியாவில் தென்
இந்திய பிராமணர்கள் வட்டாரத்தில் இந்த போலி, பொய் மடம் பற்றி பேச்சு வந்தால்
காஞ்சி மடமும் தர்மத்தை காக்க பலவற்றை செய்து வருகிறது என்று கூறி அந்த பேச்சை
மூட்டைகட்டி விடுவார்கள். காஞ்சி மடம் தொடர்ந்து பொய்யை கூறி உண்மையை மறைத்து
வருகிறது. இரண்டாவதாக, காஞ்சி மடம் போன்றவைகள் தர்மத்தை காக்க வேலை செய்கையில்
அதன் அடிப்படை தர்மமான பொய் பேசக்கூடாது என்பதை அதாவது “சத்யம் வத” என்பதை
மறக்ககூடாது. மக்கள் தங்களது குருவை தேர்ந்தெடுக்க உரிமையுடையவர்கள். குரு நல்ல
எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவரே சத்யத்திற்கு எதிராக இருப்பின் தர்மமே
அந்த இடத்தில் மூடிமறைக்கப்பட்டு விடுகிறது.
எஸ்.வித்யாசங்கர்.
1. The Illustrated
Weekly of India, "The Weekly Cover Story" - K. P. Sunil, September
13, 1987.
2 a. The Truth about
the Kumbhakonam Math, - Sri R. Krishnaswamy Aiyar and Sri K. R. Venkatraman,
Sri Ramakrishna Press, Madurai, 1977.
b. Kanchi Kamakoti Math - a Myth - Sri
Varanasi Raj Gopal Sarma, Ganga Tunga Prakashan, Varanasi, 1987. LC Call No.: BL1243.76.C62 K367 1987
https://archive.org/details/KanchiKamakotiMathAMyth
ReplyDeletehttps://archive.org/details/KanchiMathTamilRefutation